Follow on


Old Thamizh film songs lyrics

parvai ondre podhume - Yaar Nee? (1966)
parvai ondre podhume

Singers: TMS, L.R.Eswari (Jaishankar, B.V.Radha)
Music: Vedha
Lyrics: Kannadasan
Film: Yaar Nee? (1966)


பாடல்

ஈ: ஹஹ ஹஹ ஹஹ ஹா, ஹஹ ஹஹ ஹஹ ஹா
ஹஹ ஹஹ ஹஹ ஹா, ஹஹ ஹஹ ஹஹ ஹா

சௌ: பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா

ஈ: பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா

சௌ: பார்வை ஒன்றே போதுமே.....

காதல் திராட்சை கொடியிலே
கள்ளோடு ஆடும் கனியிலே
ஊறும் இன்ப கடலிலே
உன்னோடு நானும் ஆடவா

ஈ: அப்போது நெஞ்சம் ஆறுமா
எப்போதுமே கொண்டாடுமா

சௌ: பார்வை ஒன்றே போதுமே.....

ஈ: ஆசை கைகள் அழைப்பிலே
அஞ்சாமல் சேரும் அணைப்பிலே
வாழி மேனி வாடுமே
அம்மம்மா போதும் போதுமே

சௌ: இல்லாமல் நெஞ்சம் ஆறுமா
இல்லாவிட்டால் பெண் ஆகுமா

ஈ: பார்வை ஒன்றே போதுமா.....

சௌ: காலம் என்னும் காற்றிலே
கல்யாண வாழ்த்து பாட்டிலே

ஈ: ஒன்று சேர்ந்து வாழலாம்
உல்லாச வானம் போகலாம்

சௌ, ஈ: அப்போது நெஞ்சம் ஆறுமே
எப்போதுமே கொண்டாடுமே

சௌ: பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா

ஈ: பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா

சௌ, ஈ: பார்வை ஒன்றே போதுமே...

LYRICS

LRE: haha haha haha haa, haha haha haha haa
haha haha haha haa, haha haha haha haa

TMS: paarvai ondre podhume
pallaayiram sol veNdumaa
paarvai ondre podhume
pallaayiram sol veNdumaa

LRE: pesaadha kaNNum pesumaa
peN veNdumaa paarvai podhumaa

TMS: paarvai ondre podhume....

kaadhal dhraatchai kodiyile
kaLLodu aadum kaniyile
oorum inba kadalile
unnodu naanum aadavaa

LRE: appodhu nenjam aarumaa
eppodhume koNdaadumaa

TMS: paarvai ondre podhume....

LRE: aasai kaigaL azhaipile
anjaamal serum aNaippile
vaazhi meni vaadume
ammamaa podhum podhume

TMS: illaamal nenjam aarumaa
illaavittaal peN aagumaa

LRE: paarvai ondre podhumaa...

TMS: kaalam ennum kaatrile
kalyaaNa vaazhthu paattile

LRE: ondru serndhu vaazhalaam
ullaasa vaanam pogalaam

TMS, LRE: appodhu nenjam aarume
eppodhume koNdaadume

TMS: paarvai ondre podhume
pallaayiram sol veNdumaa

LRE: pesaadha kaNNum pesumaa
peN veNdumaa paarvai podhumaa

TMS, LRE: paarvai ondre podhume...