Follow on


Old Thamizh film songs

aan kaviyai vella vandha
aan kaviyai vella vandha

Singers: P.Susheela, T.M.Soundararajan (Devika, SSR)
Music: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Vanambadi (1963)


பாடல்
 
சௌ: கல் தோன்றி மண் தோன்றும்
முன் தோன்று தமிழே
கவி மழையில் ஆடி வரும்
கன்னி இள மயிலே
சொல்லோடு பொருளேந்தி
விளையாட வந்தேன்
துணை வேண்டும் தாயே
நின் திருவடிகள் வாழ்க

சு: பொதிகை மலை உச்சியிலே
புறப்பட்ட தமிழே
பூங்கவிதை வான் ஏறி
தவழ்ந்து வரும் நிலவே
மதியறியா திருமகளும்
கவி பாட வந்தேன்
மன்றத்தில் துணை நின்று
வாழ்த்துவாய் தாயே

வசனம்

சௌ: ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக
நீ அறிந்தவற்றை மறைந்து நின்று
சபையினிலே தருக
ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக
நீ அறிந்தவற்றை மறைந்து நின்று
சபையினிலே தருக

சு: பெண் கவியை வெல்ல வந்த
பெருருமகனே வருக
உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து
பொருளை அள்ளித் தருக
பெண் கவியை வெல்ல வந்த
பெருமகனே வருக
உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து
பொருளை அள்ளித் தருக...

சௌ: இலை இல்லாமல் பூத்த மலர்
என்ன மலரம்மா
இலை இல்லாமல் பூத்த மலர்
என்ன மலரம்மா

சு: அது இளமை பொங்க வீற்றிருக்கும்
கன்னி மலர் ஐயா
அது இளமை பொங்க வீற்றிருக்கும்
கன்னி மலர் ஐயா

சௌ: வலையில்லாமல் மீனை பிடிக்கும்
தேசம் என்ன தேசம்
வலையில்லாமல் மீனை பிடிக்கும்
தேசம் என்ன தேசம்

சு: அது வாலிபரின் கண்ணில் உள்ள
காதல் என்னும் தேசம்
அது வாலிபரின் கண்ணில் உள்ள
காதல் என்னும் தேசம்

சௌ: ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக

சு: உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து
பொருளை அள்ளித் தருக.....

சௌ: காதல் வந்தால் மேனியிலே
என்ன உண்டாகும்

சு: அது கன்னியரை கண்டவுடன்
கால்கள் தள்ளாடும்

சௌ: காதலித்தாள் மறைந்து விட்டால்
வாழ்வு என்னாகும்

சு: அன்பு காட்டுகின்ற வேறிடத்தில்
காதல் உண்டாகும்

சௌ: ஒரு முறைதான் காதல் வரும்
தமிழர் பண்பாடு

சு: அந்த ஒன்று எது என்பதுதான்
கேள்வி இப்போது

சௌ: வருவதெல்லாம் காதலித்தால்
வாழ்வதெவ்வாறு

சு: தன் வாழ்க்கையையே காதலித்தால்
புரியும் அப்போது

சௌ: ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக

சு: உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து
பொருளை அள்ளித் தருக.....

வசனம்

சு: தாதி தூது தீது தத்தும்
தத்தை சொல்லாது
சௌ: ஆ...
சு: தூதி தூது ஒத்தித்தது
தூது செல்லாது
சௌ: என்னது
சு: தேது தித்து தொத்து தீது
தெய்வம் வராது
சௌ: ஓ ஹொ ஹொஹொ
சு: பின்பு துத்தி தத்தும் தத்தை
வாழ தித்தித்ததோது
சௌ: என்னப்பா இது

வசனம்

சு: அடிமை தூது பயன்படாது
கிளிகள் பேசாது
அன்பு தோழி தூது சென்றால்
விரைவில் செல்லாது
அடிமை தூது பயன்படாது
கிளிகள் பேசாது
அன்பு தோழி தூது சென்றால்
விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால்
பயன் இருக்காது
தெய்வத்தையே தொழுது நின்றால்
பயன் இருக்காது
இளந்தேமல் கொண்ட கன்னி வாழ
இனியது கூறு
இளன்தேமல் கொண்ட கன்னி வாழ
இனியது கூறு

பெண் கவியை வெல்ல வந்த
பெருமகனே வருக
உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து
பொருளை அள்ளித் தருக...

LYRICS

TMS: kal thondri maN thondrum
mun thondru thamizhe
kavi mazhaiyil aadi varum
kanni iLam mayile
sollodu poruLendhi
viLaiyaada vandhen
thuNai veNdum thaaye
nin thiruvadigaL vaazhga

PS: podhigai malai uchchiyile
purapatta thamizhe
poonkavidhai vaan eri
thavazhndhu varum nilave
madhiyariyaa thirumagaLum
kavi paada vandhen
mandrathil thuNai nindru
vaazhthuvaai thaaye

Dialogue

TMS: aaN kaviyai vella vandha
peN kaviye varuga
nee arindhavatrai maraindhu nindru
sabaiyinile tharuga
aaN kaviyai vella vandha
peN kaviye varuga
nee arindhavatrai maraindhu nindru
sabaiyinile tharuga

PS: peN kaviyai vella vandha
perumagane varuga
ungaL pettagathai thirandhu vaithu
poruLai aLLi tharuga
peN kaviyai vella vandha
perumagane varuga
ungaL pettagathai thirandhu vaithu
poruLai aLLi tharuga

TMS: ilai illaamal pootha malar
enna malar ammaa
ilai illaamal pootha malar
enna malar ammaa

PS: adhu iLamai ponga veetrirukkum
kanni malar aiyaa
adhu iLamai ponga veetrirukkum
kanni malar aiyaa

TMS: valai illaamal meenai pidikkum
dhesam enna dhesam
valai illaamal meenai pidikkum
dhesam enna dhesam

PS: adhu vaalibarin kaNNil uLLa
kaadhal ennum dhesam
adhu vaalibarin kaNNil uLLa
kaadhal ennum dhesam

TMS: aaN kaviyai vella vandha
peN kaviye varuga

PS: ungaL pettagathai thirandhu vaithu
poruLai aLLi tharuga

TMS: kaadhal vandhaal meniyile
enna uNdaagum

PS: adhu kanniyarai kaNdavudan
kaalgaL thaLLaadum

TMS: kaadhalithaaL maraindhu vittaal
vaazhvu ennaagum

PS: anbu kaattugindra veridathil
kaadhal uNdaagum

TMS: oru muraithaan kaadhal varum
thamizhar paNpaadu

PS: andha ondru edhu enbadhuthaan
keLvi ippodhu

TMS: varuvadhellaam kaadhalithaal
vaazhvadhevvaaru

PS: than vaazhkaiyaiye kaadhalithaal
puriyum appodhu

TMS: aaN kaviyai vella vandha
peN kaviye varuga

PS: ungaL pettagathai thirandhu vaithu
poruLai aLLi tharuga

Dialogue

PS: thaadhi thoodhu theedhu thathum
thathai sollaadhu
TMS: aa...
thoodhi thoodhu othithadhu
thoodhu sellaadhu
TMS: ennadhu
PS: thedhu thithu thothu theedhu
dheivam varaadhu
TMS: o ho hoho
PS: pinbu thuthi thathum thathai
vaazha thithithathodhu
TMS: ennappaa idhu

Dialogue

PS: adimai thoodhu payanpadaadhu
kiLigaL pesaadhu
anbu thozhi thoodhu sendraal
 viraivil sellaadhu
adimai thoodhu payanpadaadhu
kiLigaL pesaadhu
anbu thozhi thoodhu sendraal
 viraivil sellaadhu
dheivathaiye thozhudhu nindraal
payan irukkaadhu
dheivathaiye thozhudhu nindraal
payan irukkaadhu
iLanthemal koNda kanni vaazha
iniyadhu kooru
iLanthemal koNda kanni vaazha
iniyadhu kooru

peN kaviyai vella vandha
perumagane varuga
ungaL pettagathai thirandhu vaithu
poruLai aLLi tharuga...