Follow on

andru kollum arain aanai - Poompuhar (1964)
Old Thamizh film songs

needhiye neeyum irukkindraayaa
andru kollum arasin aanai

Singer
: K.B.Sundarambal
Music: R.Sudharsanam
Lyrics: Mayavanathan
Film: Poompuhar (1964)


பாடல்

நீதியே நீயும் இருக்கின்றாயா..
இல்லை நீயும் அந்த
கொலை களத்தில் உயிர் விட்டாயா..

அன்று கொல்லும் அரசின் ஆணை
வென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே
வந்துவிட்டது....

அன்று கொல்லும் அரசின் ஆணை
வென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே
வந்துவிட்டது.....

காலடி தாமரை நோவதை மறந்து
காதலனோடு நடந்தாளே..
அந்த காலன் தொடர்ந்து
நடந்ததை அறிந்து
கற்புக்கரசி துடித்தாளே...
அடையா கதவாய்
இமையா விழியாய்
ஆயிர யுகங்கள் பொருத்தாளே..
இன்று விளையா நிலத்தின்
விதையாய் போன
வேதனை அறிந்து துடித்தாளே...

அன்று கொல்லும் அரசின் ஆணை
வென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே
வந்துவிட்டது.....

வெயிலே இல்லாத காலத்தில்
கிடைக்கின்ற நிழலால் பயன் என்ன
கெஞ்சி வேண்டிய பொழுது
ஒதுங்கிய நீதி
வந்தென்ன போயென்ன....
உயிரே போனபின் உடலென்னும்
கூட்டுக்கு உயர்வென்ன தாழ்வென்ன...
செய்யா பிழைக்கே
தலை அது வீழ்ந்தால்
செய்தவன் கதியென்ன
செய்தவன் கதியென்ன
பிழை செய்தவன் கதியென்ன
LYRICS

needhiye neeyum irukkindraayaa..
illai neeyum andha
kolai kaLathil uyir vittaayaa

andru kollum arasin aaNai
vendru vittadhu
nindru kollum dheivam inge
vandhu vittadhu....

andru kollum arasin aaNai
vendru vittadhu
nindru kollum dheivam inge
vandhu vittadhu....

kaaladi thaamarai novadhai marandhu
kaadhalanodu nadandhaaLe..
andha kaalan thodarndhu
nadandhadhai arindhu
karpukarasi thudithaaLe...
adaiyaa kadhavaai
imaiyaa viziyaai
aayira yugangaL poruthaaLe..
indru viLaiyaa nilathin
vidhaiyaai pona
vedhanai arindhu thudithaaLe...

andru kollum arasin aaNai
vendru vittadhu
nindru kollum dheivam inge
vandhu vittadhu....

veyile illaadha kaalathil
kidaikindra nizhalaal payan enna
kenji vendiya pozhudhu
odhungiya needhi
vandhenna poi enna...
uyire ponapin udalenum
koottuku uyarvenna thaazhvenna...
seyyaa pizhike
thalai adhu veezhndhaal
seidhavan gadhiyenna
seidhavan gadhiyenna
pizhai seidhavan gadhiyenna