Follow on

poojaikku vandha - Paadha Kaanikkai (1962)
Old Thamizh film songs


poojaikku vandha

Singers: P.B.Sreenivas, S.Janaki
Music: Viswanathan - Ramamoorthy
Lyrics: Kannadasan
Film: Paadha Kaanikkai (1962)


பாடல்

ஸ்ரீ: பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா

பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா

ஜா: ஒஹொ ஹொ...

ஸ்ரீ: பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா...

ஜா: மலர் கொள்ள வந்த தலைவா வா
மணம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா

மலர் கொள்ள வந்த தலைவா வா
மணம் கொள்ள வந்த இறைவா வா

ஸ்ரீ: ஒஹொ ஹொ...

ஜா: கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா.....

ஸ்ரீ: கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா

ஜா: ஒஹொ ஹொ...

ஸ்ரீ: கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா

ஜா: அருகில் வந்தது உருகி நின்றது
உறவு தந்தது முதல் இரவு
இருவர் காணவும் ஒருவராகவும்
இரவில் வந்தது வெண்ணிலவு

மலர் கொள்ள வந்த தலைவா வா
மணம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா....

ஸ்ரீ: செக்க சிவந்த இதழோ இதழோ
பவழம் பவழம் செம்பவழம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில்
மலரும் மலரும் பூ மலரும்

ஜா: எண்ணி வந்தது கண்ணில் நின்றது
என்னை வென்றது உன் முகமே
இன்ப பூமியில் அன்பு மேடையில்
என்றும் காதலர் காவியமே

மலர் கொள்ள வந்த தலைவா வா
மணம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா....

ஸ்ரீ: பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா
Lyrics

PBS: poojaiku vandha malare vaa
bhoomikku vandha nilave vaa
peNNendru eNNi pesaamal vandha
pon vaNNa meni silaiye vaa

poojaiku vandha malare vaa
bhoomikku vandha nilave vaa

SJ: oho ho...

PBS: peNNendru eNNi pesaamal vandha
pon vaNNa meni silaiye vaa

SJ: malar koLLa vandha thalaivaa vaa
maNam koLLa vandha iraivaa vaa
kaiyodu koNdu thoLodu serthu
kaN mooda vandha kalaiye vaa

malar koLLa vandha thalaivaa vaa
maNam koLLa vandha iraivaa vaa

PBS: oho ho...

SJ: kaiyodu koNdu thoLodu serthu
kaN mooda vandha kalaiye vaa

PBS: kodai kaalathin nizhale nizhale
konjam konjam arugil vaa

SJ: oho ho...

PBS:  kodai kaalathin nizhale nizhale
konjam konjam arugil vaa
aadai kattiya radhame radhame
arugil arugil naan varavaa

SJ: arugil vandhadhu urugi nindradhu
uravu thandhadhu mudhal iravu
iruvar kaaNavum oruvaraagavum
iravil vandhadhu veNNilavu

malar koLLa vandha thalaivaa vaa
maNam koLLa vandha iraivaa vaa
kaiyodu koNdu thoLodu serthu
kaN mooda vandha kalaiye vaa....

PBS: chekka sivandha idhazho idhazho
pavazham pavazham sempavazham
thenil ooriya mozhiyil mozhiyil
malarum malarum poo malarum

SJ: eNNi vandhadhu kaNNil nindradhu
ennai vendradhu un mugame
inba bhoomiyil anbu medaiyil
endrum kaadhalar kaaviyame

malar koLLa vandha thalaivaa vaa
maNam koLLa vandha iraivaa vaa
kaiyodu koNdu thoLodu serthu
kaN mooda vandha kalaiye vaa....

PBS: poojaiku vandha malare vaa
bhoomikku vandha nilave vaa
peNNendru eNNi pesaamal vandha
pon vaNNa meni silaiye vaa