பாடல் வரிகள்
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க....
பூவுலகின் லட்சியங்கள்
பூ போன்றே வாடும்
தெய்வ சொர்க நிச்சயம்தான்
திருமணமாய் கூடும்
பொருத்தமென்றால்
புது பொருத்தம்
பொருந்தி விட்ட ஜோடி
பொருத்தமென்றால்
புது பொருத்தம்
பொருந்தி விட்ட ஜோடி
நான் புலவனென்றால்
பாடிடுவேன்
கவிதை ஒரு கோடி
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க....
தன்மையிலும் மென்மையிலும்
தாமரை போல் நெஞ்சம்
தாய் குலத்தின் இலக்கணங்கள்
தலைவியிடம் தஞ்சம்
ஆலயமாய் வீடுதனை
அலங்கரிக்க வந்தாள்
ஆலயமாய் வீடுதனை
அலங்கரிக்க வந்தாள்
நீ வாழும் நிலை
உனக்களித்தான்
வாழ்த்துகின்றேன் நானே
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க....
மண வாழ்க்கை அமைவதற்கோ
மனைவி வாய்க்க வேண்டும்
குலமகளாய் கிடைப்பதற்கோ
கொடுத்து வைக்க வேண்டும்
அருமைகளும் பெருமைகளும்
நிறைவதுதான் இன்பம்
அருமைகளும் பெருமைகளும்
நிறைவதுதான் இன்பம்
நீ அத்தனையும் பெற்று விட்டாய்
ஆனந்தமாய் வாழ்க
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க....
Lyrics
nalla manam vaazhga
naadu potra vaazhga
then thamizh pol
vaan mazhai pol
sirandhu endrum vaazhga
nalla manam vaazhga
naadu potra vaazhga....
poovulagin latchiyangaL
poo pondre vaadum
dheiva sorga nichayamdhaan
thirumaNamaai koodum
poruthamendraal
pudhu porutham
porundhi vitta jodi
poruthamendraal
pudhu porutham
porundhi vitta jodi
naan pulavanendraal
paadiduven
kavidhai oru kodi
nalla manam vaazhga
naadu potra vaazhga....
thanmaiyilum menmaiyilum
thaamarai pol nenjam
thaai kulathin ilakkaNangaL
thalaiviyidam thanjam
aalayamaai veeduthanai
alangarikka vandhaaL
aalayamaai veeduthanai
alangarikka vandhaaL
nee vaazhum nilai
unakkaLithaan
vaazhthugiren naane
nalla manam vaazhga
naadu potra vaazhga....
maNa vaazhkai amaivadharko
manaivi vaaikka veNdum
kulamagaLaai kidaipadharko
koduthu vaikka veNdum
arumaigaLum perumaigaLum
niraivadhuthaan inbam
arumaigaLum perumaigaLum
niraivadhuthaan inbam
nee athanaiyum petru vittaai
aanandhamaai vaazhga
nalla manam vaazhga
naadu potra vaazhga
then thamizh pol
vaan mazhai pol
sirandhu endrum vaazhga
nalla manam vaazhga
naadu potra vaazhga....