Follow on

Old Thamizh film songs lyrics

pagalile chandiranai paarka ponen - Kula magal Radhai (1963)
pagalile chandiranai paarka ponen

Singer: P Susheela (Saroja Devi)
Music: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Kula magal Radhai (1963)

பாடல் வரிகள்

பகலிலே சந்திரனை பார்க்க போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
பகலிலே சந்திரனை பார்க்க போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
இரவிலே அவனை காண நானும் நடப்பேன்
இரவிலே அவனை காண நானும் நடப்பேன்
அவன் எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான்

பகலிலே சந்திரனை பார்க்க போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்....

கடலிலே மீன் பிடிக்க நானும் போனேன்
மீன் கரையேறி போனதாக ஒருத்தி சொன்னாள்
கடலிலே மீன் பிடிக்க நானும் போனேன்
மீன் கரையேறி போனதாக ஒருத்தி சொன்னாள்
படகிலே  மனதை ஏற்றி பார்க்க போனேன்
படகிலே  மனதை ஏற்றி பார்க்க போனேன்
அதை பாறையிலே மோதும்படி ஒருத்தி சொன்னாள்

பகலிலே சந்திரனை பார்க்க போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்....

ஆலயத்தில் ஆண்டவனை பார்க்க போனேன்
அவள் அர்த்தஜாம பூஜையிலே பார்க்க சொன்னாள்
ஆலயத்தில் ஆண்டவனை பார்க்க போனேன்
அவள் அர்த்தஜாம பூஜையிலே பார்க்க சொன்னாள்
மாலை ஒன்று கையில் கொண்டு நானும் போனேன்
மாலை ஒன்று கையில் கொண்டு நானும் போனேன்
அவள் மலரை மட்டும் உதிர்த்துவிட்டு போக சொன்னாள்

பகலிலே சந்திரனை பார்க்க போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
இரவிலே அவனை காண நானும் நடப்பேன்
அவன் எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான்

பகலிலே சந்திரனை பார்க்க போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்....
LYRICS

pagalile chandiranai paarka ponen
avan iravile varuvadhaaga oruthi sonnaaL
pagalile chandiranai paarka ponen
avan iravile varuvadhaaga oruthi sonnaaL
iravile avanai kaaNa naanum nadappen
iravile avanai kaaNa naanum nadappen
avan ellorum paarkumpadi uyarathil iruppaan

pagalile chandiranai paarka ponen
avan iravile varuvadhaaga oruthi sonnaaL....

kadlile meen pidikka naanum ponen
meen karaiyeri ponadhaaga oruthi sonnaaL
kadlile meen pidikka naanum ponen
meen karaiyeri ponadhaaga oruthi sonnaaL
padagile manadhai etri paarka ponen
padagile manadhai etri paarka ponen
adhai paaraiyile modhumbadi oruthi sonnaaL

pagalile chandiranai paarka ponen
avan iravile varuvadhaaga oruthi sonnaaL....

aalayathil aaNdavanai paarka ponen
avaL arthajaama poojaiyile paarka sonnaaL
aalayathil aaNdavanai paarka ponen
avaL arthajaama poojaiyile paarka sonnaaL
maalai ondru kaiyil koNdu naanum ponen
maalai ondru kaiyil koNdu naanum ponen
avaL malarai mattum udirthuvittu poga sonnaaL

pagalile chandiranai paarka ponen
avan iravile varuvadhaaga oruthi sonnaaL
iravile avanai kaaNa naanum nadappen
avan ellorum paarkumpadi uyarathil iruppaan

pagalile chandiranai paarka ponen
avan iravile varuvadhaaga oruthi sonnaaL...