பாடல் வரிகள்
இன்று போல என்றும் வாழ்க
எங்கள் வீட்டு பொன் மகளே
வாழைக் கன்று போல தலைவன் பக்கம்
நின்றிருக்கும் குல மகளே
திருநிறை செல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
என் இரு விழி போலே இருவரும் இன்று
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக
திருநிறை செல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
திருமணம் கொண்டாள் இனிதாக.....
மஞ்சள் குங்குமம் மலர் சூடி
மணமகள் மேடையில் அங்கிருக்க
மஞ்சள் குங்குமம் மலர் சூடி
மணமகள் மேடையில் அங்கிருக்க
நெஞ்சம் நிறைய வாழ்த்துக்கள் ஏந்தி
நல்லவன் ஒருவன் இங்கிருக்க
நெஞ்சம் நிறைய வாழ்த்துக்கள் ஏந்தி
நல்லவன் ஒருவன் இங்கிருக்க
ஆயிரம் காலம் நாயகன் கூட
வாழ்ந்திடு மகளே வளமாக
ஆனந்தத்தாலே கண்ணீர் பொங்கும்
ஏழையின் கண்கள் குளமாக
திருநிறை செல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
திருமணம் கொண்டாள் இனிதாக....
எங்கள் வானத்து வெண்ணிலவாம்
இவள் இன்னொரு வீட்டுக்கு விளக்கானாள்
எங்கள் வானத்து வெண்ணிலவாம்
இவள் இன்னொரு வீட்டுக்கு விளக்கானாள்
எங்கள் குலம் வளர் கண்மணியாம்
இவள் இன்னொரு குடும்பத்தின் கண்ணானாள்
தாய் வழி வந்த நாணமும் மானமும்
தன்மையில் கொண்டு நடப்பவளாம்
கோயிலில் இல்லை கும்பிடும் தெய்வம்
கொண்டவன் என்றே நினைப்பவளாம்
திருநிறை செல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
திருமணம் கொண்டாள் இனிதாக....
ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு
வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு
ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு
வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு
இருவரும் ஒருவரில் பாதி என்று
இங்கு இன்புற வாழட்டும் பல்லாண்டு
இருவரும் ஒருவரில் பாதி என்று
இங்கு இன்புற வாழட்டும் பல்லாண்டு
குறள் வழி காணும் அறம் பொருள் இன்பம்
குறைவின்றி நாளும் வளர்ந்திடுக
தென்னவர் போற்றும் பண்புகள் யாவும்
கண்ணென போற்றி வாழ்ந்திடுக
திருநிறை செல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
என் இரு விழி போலே இருவரும் இன்று
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக
Lyrics
indru pola endrum vaazhga
engaL veetu pon magaLe
vaazhai kandru pola thalaivan pakkam
nidrirukkum kula magaLe
thirunirai selvi mangaiyarkarasi
thirumaNam koNdaaL inidhaaga
en iru vizhi pole iruvarum indru
illaram kaaNattum nalamaaga
illaram kaaNattum nalamaaga
thirunirai selvi mangaiyarkarasi
thirumaNam koNdaaL inidhaaga
thirumaNam koNdaaL inidhaaga....
manjaL kungumam malar soodi
maNamagaL medaiyil angirukka
manjaL kungumam malar soodi
maNamagaL medaiyil angirukka
nenjam niraiya vaazhthukkaL endhi
nallavan oruvan ingirukka
nenjam niraiya vaazhthukkaL endhi
nallavan oruvan ingirukka
aayiram kaalam naayagan kooda
vaazhndhidu magaLe vaLamaaga
aanandhathaale kaNNeer pongum
ezhaiyin kaNgaL kuLamaaga
thirunirai selvi mangaiyarkarasi
thirumaNam koNdaaL inidhaaga
thirumaNam koNdaaL inidhaaga....
engaL vaanathu veNNilavaam
ivaL innoru veettukku viLakkaanaaL
engaL vaanathu veNNilavaam
ivaL innoru veettukku viLakkaanaaL
engaL kulam vaLar kaNmaNiyaam
ivaL innoru kudumbathin kaNNaanaaL
thaai vazhi vandha naaNamum maanamum
thanmaiyil koNdu nadapavaLaam
koyilil illai kumbidum dheivam
koNdavan endre ninaipavaLaam
thirunirai selvi mangaiyarkarasi
thirumaNam koNdaaL inidhaaga
thirumaNam koNdaaL inidhaaga....
oruvarai oruvar anbu koNdu
varum sugathilum thuyarilum pangu koNdu
oruvarai oruvar anbu koNdu
varum sugathilum thuyarilum pangu koNdu
iruvarum oruvaril paadhi endru
ingu inbura vaazhatum pallaaNdu
iruvarum oruvaril paadhi endru
ingu inbura vaazhatum pallaaNdu
kuraL vazhi kaaNum aram poruL inbam
kuraivindri naaLum vaLarndhiduga
thennavar potrum paNbugaL yaavum
kaNNena potri vaazhndhiduga
thirunirai selvi mangaiyarkarasi
thirumaNam koNdaaL inidhaaga
en iru vizhi pole iruvarum indru
illaram kaaNattum nalamaaga
illaram kaaNattum nalamaaga