பாடல் வரிகள்
சௌ: பொன் அந்தி மாலை பொழுது..
பொங்கட்டும் இன்ப நினைவு..
அன்னத்தின் தோகை என்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ
கொஞ்சி சிரித்தாள்
என் நெஞ்சை பறித்தாள்
சு: பொன் அந்தி மாலை பொழுது..
பொங்கட்டும் இன்ப நினைவு.....
மலைமகள் மலர் உடை அணிந்தாள்
வெள்ளி பனி விழ முழுவதும் நனைந்தாள்
மலைமகள் மலர் உடை அணிந்தாள்
வெள்ளி பனி விழ முழுவதும் நனைந்தாள்
சௌ: வருகென அவள் நம்மை அழைத்தாள்
தன் மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
வருகென அவள் நம்மை அழைத்தாள்
தன் மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
சு: இதயத்து வீணையில்
எழுகின்ற காதலின்
இசை நம்மை மயக்கட்டுமே
சௌ: உதயத்து காலைலில்
விழித்திடும் வேளையில்
மலர்களும் சிரிக்கட்டுமே
சௌ: பொன் அந்தி மாலை பொழுது..
சு: பொங்கட்டும் இன்ப நினைவு.....
சௌ: கட்டு கூந்தல் தொட்டு தாவி
என்னை தேடி ஆடி வர
சு: கன்னி தேனை உண்ணும் பார்வை
வண்ணம் நூறு பாடி வர
சௌ: கட்டு கூந்தல் தொட்டு தாவி
என்னை தேடி ஆடி வர
சு: கன்னி தேனை உண்ணும் பார்வை
வண்ணம் நூறு பாடி வர
சௌ: மெல்ல மெல்ல வழங்கட்டும் கவிதை
சு: சொல்லி சொல்லி மயங்கட்டும் இளமை
சௌ: எந்நேரமும் உன்னோடு நான்
ஒன்றாகி வாழும் உறவல்லவோ
சு: பொன் அந்தி மாலை பொழுது..
சௌ: பொங்கட்டும் இன்ப நினைவு.....
சௌ: ஆடை மூடும் ஜாதி பூவில்
ஆசை உண்டாக
ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில்
போதை உண்டாக
ஆடை மூடும் ஜாதி பூவில்
ஆசை உண்டாக
ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில்
போதை உண்டாக
சு: கண்ணோடு கண் பண்பாடுமோ
பெண் மேனிதான் என்னாகுமோ
சௌ: அணைத்திடும் கரங்களில்
வளைந்து நின்றாடும்
அணைத்திடும் கரங்களில்
வளைந்து நின்றாடும்
ஆனந்த அருவியில் சுகம்
பல தேடும்
ஆனந்த அருவியில் சுகம்
பல தேடும்
சு: பொன் அந்தி மாலை பொழுது..
பொங்கட்டும் இன்ப நினைவு..
சௌ: அன்னத்தின் தோகை என்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ
கொஞ்சி சிரித்தாள்
என் நெஞ்சை பறித்தாள்
சு: கொஞ்சி சிரித்தாய்
என் நெஞ்சை பறித்தாய்
சௌ, சு: கொஞ்சி சிரித்தாள்
என் நெஞ்சை பறித்தாள்
Lyrics
TMS: pon andhi maalai pozhudhu..
pongattum inba ninaivu..
annathin thogai endra meniyo
aLLi koL endru sollum paarvaiyo
konji sirithaaL
en nenjai pariththaaL
PS: pon andhi maalai pozhudhu..
pongattum inba ninaivu..
malaimagaL malar udai aNindhaaL
veLLi pani vizha muzhuvadhum nanaindhaaL
malaimagaL malar udai aNindhaaL
veLLi pani vizha muzhuvadhum nanaindhaaL
TMS: varughena avaL nammai azhaithaaL
than madithanil thuyilidam koduthaal
varughena avaL nammai azhaithaaL
than madithanil thuyilidam koduthaal
PS: idhyathu veeNaiyil
ezhugindra kaadhalin
isai nammai mayakkattume
TMS: udhayathu kaalaiyil
vizhithidum veLaiyil
malargaLum sirikkattume
TMS: pon andhi maalai pozhudhu..
PS: pongattum inba ninaivu..
TMS: kattu koondhal thottu thaavi
ennai thedi aadi vara
PS: kanni thenai uNNum paarvai
vaNNam nooru paadi vara
TMS: kattu koondhal thottu thaavi
ennai thedi aadi vara
PS: kanni thenai uNNum paarvai
vaNNam nooru paadi vara
TMS: mella mella vazhangattum kavidhai
PS: solli solli mayangattum iLamai
TMS: enneramum unnodu naan
ondraagi vaazhum uravallavo
PS: pon andhi maalai pozhudhu..
TMS: pongattum inba ninaivu..
TMS: aadai moodum jaadhi poovil
aasai uNdaaga
aasai koNdu paarkkum kaNNil
bodhai uNdaaga
aadai moodum jaadhi poovil
aasai uNdaaga
aasai koNdu paarkkum kaNNil
bodhai uNdaaga
PS: kaNNodu kaN paNpaadumo
peN menithaan ennaagumo
TMS: aNaithidum karangaLil
vaLaindhu nindraadum
aNaithidum karangaLil
vaLaindhu nindraadum
aanandha aruviyil sugam
pala thedum
aanandha aruviyil sugam
pala thedum
PS: pon andhi maalai pozhudhu..
pongattum inba ninaivu..
TMS: annathin thogai endra meniyo
aLLi koL endru sollum paarvaiyo
konji sirithaaL
en nenjai pariththaaL
PS: konji sirithaai
en nenjai pariththaai
TMS, PS: konji sirithaaL
en nenjai pariththaaL