Follow on

Old Thamizh film songs

vetri meedhu vetri vandhu

Singer: S.P.Balasubrahmanyam
Music: M.S.V
Lyrics: Vaali
Film: Thedi vandha mappillai (1970)
Cast: MGR, Jayalalitha

பாடல்
வெற்றி மீது வெற்றி வந்து
என்னை சேரும்
அதை வாங்கி தந்த பெருமையெல்லாம்
உன்னை சேரும்

வெற்றி மீது வெற்றி வந்து
என்னை சேரும்
அதை வாங்கி தந்த பெருமையெல்லாம்
உன்னை சேரும்

பெற்றெடுத்து பேர் கொடுத்த
அன்னையல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம்
என்பதுண்மையல்லவோ

பெற்றெடுத்து பேர் கொடுத்த
அன்னையல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம்
என்பதுண்மையல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து
என்னை சேரும்
அதை வாங்கி தந்த பெருமையெல்லாம்
உன்னை சேரும்.....

தாய் பாலில் ஈரம் கண்டேன்
தாலாட்டில் தமிழை கண்டேன்
தாய் பாலில் ஈரம் கண்டேன்
தாலாட்டில் தமிழை கண்டேன்

உண்ணாமல் இருக்க கண்டேன்
உறங்காமல் விழிக்க கண்டேன்
உண்ணாமல் இருக்க கண்டேன்
உறங்காமல் விழிக்க கண்டேன்

மற்றவர்க்கு வாழுகின்ற
உள்ளம் என்னவோ
அது உன்னிடத்தில் நான் அறிந்த
பாடம் அல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து
என்னை சேரும்
அதை வாங்கி தந்த பெருமையெல்லாம்
உன்னை சேரும்.....

அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
பிள்ளையினால் பன்னீராகும்
அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
பிள்ளையினால் பன்னீராகும்

ஆசை தரும் கனவுகளெல்லாம்
அவனால் தான் நனவுகளாகும்
ஆசை தரும் கனவுகளெல்லாம்
அவனால் தான் நனவுகளாகும்

அன்று தொட்டு நீ நினைத்த
எண்ணம் என்னம்மா
அதை இன்று தொட்டு நான்
முடிக்கும் வண்ணம் பாரம்மா

வெற்றி மீது வெற்றி வந்து
என்னை சேரும்
அதை வாங்கி தந்த பெருமையெல்லாம்
உன்னை சேரும்.....