Follow on

Old Thamizh film songs

kaadhal enbadhu edhuvarai

Singers: P.B.Sreenivas, P.Susheela, J.P.Chandrababu, L.R.Eswari
Music: Viswanathan - Ramamoorthy
Lyrics: Kannadasan
Film: Paadha Kaanikkai (1962)


பாடல்
கோரஸ்: குவ்வ குவ்வ குவ குவகுவகுவ....
ஆஹ ஹா ஆஹ ஹா....

ஸ்ரீ: காதல் என்பது எதுவரை
ச: கல்யாண காலம் வரும் வரை
ஸ்ரீ: கல்யாணம் என்பது எதுவரை
ச: கழுத்தினில் தாலி விழும் வரை

ஸ்ரீ: ஆஹ...காதல் என்பது எதுவரை
ச: கல்யாண காலம் வரும் வரை
ஸ்ரீ: கல்யாணம் என்பது எதுவரை
ச: கழுத்தினில் தாலி விழும் வரை....

ஸ்ரீ: பெண்ணுக்கு இளமை எதுவரை
ச: பிள்ளைகள் இரண்டு வரும் வரை
ஸ்ரீ: கண்ணுக்கு அழகு எது வரை
ச: கையில் கிடைக்கும் நாள் வரை

ஸ்ரீ: ஆஹ...காதல் என்பது எதுவரை
ச: கல்யாண காலம் வரும் வரை
ஸ்ரீ: கல்யாணம் என்பது எதுவரை
ச: கழுத்தினில் தாலி விழும் வரை....

சு: காதல் கொண்டாலே ஆடவர்கள் பாவம்
புத்தி சொல்லாமல் கொள்ளாமல் போகும்
காதல் கொண்டாலே ஆடவர்கள் பாவம்
புத்தி சொல்லாமல் கொள்ளாமல் போகும்

ஈ: அவரை கண்டாலே ஊர் முழுதும் பேசும்
தோற்றம் கால் வாசி பைத்தியம் போல் ஆகும்
அவரை கண்டாலே ஊர் முழுதும் பேசும்
தோற்றம் கால் வாசி பைத்தியம் போல் ஆகும்

ச: அந்த பைத்தியத்தை தீர்ப்பதற்கு மருந்து
பெண்கள் பார்வையிலே ஊறி வரும் விருந்து
அந்த பைத்தியத்தை தீர்ப்பதற்கு மருந்து
பெண்கள் பார்வையிலே ஊறி வரும் விருந்து

ஸ்ரீ: இந்த வைத்தியர்கள் பக்கத்திலே இருந்து
கண்ணை வைத்து விட்டால் நோய் போகும் பறந்து
இந்த வைத்தியர்கள் பக்கத்திலே இருந்து
கண்ணை வைத்து விட்டால் நோய் போகும் பறந்து

ஸ்ரீ: ஆஹ...காதல் என்பது எதுவரை
ச: கல்யாண காலம் வரும் வரை
ஸ்ரீ: கல்யாணம் என்பது எதுவரை
ச: கழுத்தினில் தாலி விழும் வரை....

சு: பெண்கள் ஆடையினை அழகு செய்யும் போதும்
அதை ஆசை என்று பின்னாலே ஓடும்
பெண்கள் ஆடையினை அழகு செய்யும் போதும்
அதை ஆசை என்று பின்னாலே ஓடும்

ஈ: இந்த காளையரின் உள்ளம் தினம் மாறும்
இவர் காதலிலே பெருமை என்ன வாழும்
இந்த காளையரின் உள்ளம் தினம் மாறும்
இவர் காதலிலே பெருமை என்ன வாழும்

ச: என்றும் மாறாது நாங்கள் கொண்ட காதல்
எங்கள் காதல் போயின் காதல் போயின் சாதல்
என்றும் மாறாது நாங்கள் கொண்ட காதல்
எங்கள் காதல் போயின் காதல் போயின் சாதல்

ஸ்ரீ: இதில் ஆதாரம் வேண்டுமென்றால் பாரு
அந்த அம்பிகாபதி கதையை கேளு
அந்த அம்பிகாபதி கதையை கேளு

ஸ்ரீ: ஆஹ...காதல் என்பது எதுவரை
ச: கல்யாண காலம் வரும் வரை
ஸ்ரீ: கல்யாணம் என்பது எதுவரை
ச: கழுத்தினில் தாலி விழும் வரை....
ல ல ல ல ல ல லா....