Follow on

Old Thamizh film songs

paadum bodhu naan thendral kaatru

Singers:
S.P.Balasubrahmanyam
Music: M.S.Viswanathan
Lyrics: Pulamaipithan
Film: Netru Indru Naalai (1974)
Cast: MGR, Rajashree
பாடல்
அஹஹா....
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் பாடல்
பாட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று.....

மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து
இதழில் தேனை குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனை குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும்
நானும் ஒன்று தானே
இன்ப நாளும் இன்றுதானே
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று.....

அஹா ஒஹோ அஹஹா ஒஹொஹோ....

எல்லைகள் இல்லா உலகம்
என் இதயமும் அது போல் நிலவும்
எல்லைகள் இல்லா உலகம்
என் இதயமும் அது போல் நிலவும்
புதுமை உலகம் மலரும்
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும்
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
யாரும் வாழ பாடும் காற்றும்
நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் பாடல்
பாட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ.. மங்கையோ... தென்னங்கீற்று.....