பாடல்
வெள்ளி கிழமை விடியும் வேளை
வாசலில் கோலம் இட்டேன்
வாசலில் கோலம் இட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி
கூந்தலில் பூ முடித்தேன்...ஆஆ.ஆ..
கூந்தலில் பூ முடித்தேன்
வெள்ளி கிழமை விடியும் வேளை
வாசலில் கோலம் இட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி
கூந்தலில் பூ முடித்தேன்.....
மஞ்சள் கொஞ்சிடும் மங்கல முகத்தில்
குங்குமம் விளங்கட்டுமே
கோயில்குங்குமம் விளங்கட்டுமே
கை வளை ஆடலும் காலடி ஓசையும்
வருகையை முழங்கட்டுமே
பாவை வருகையை முழங்கட்டுமே
வெள்ளி கிழமை விடியும் வேளை
வாசலில் கோலம் இட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி
கூந்தலில் பூ முடித்தேன்.....
மார்கழி திங்களை மூடிய பனித்திரை
காற்றினில் விலகட்டுமே
காலை காற்றினில் விலகட்டுமே
மார்கழி திங்களை மூடிய பனித்திரை
காற்றினில் விலகட்டுமே
காலை காற்றினில் விலகட்டுமே
வாடையில் வாடிய மேனியை மூடிய
மன்னவன் விழிக்கட்டுமே
காதல் மன்னவன் விழிக்கட்டுமே
வெள்ளி கிழமை விடியும் வேளை
வாசலில் கோலம் இட்டேன்
வாசலில் கோலம் இட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி
கூந்தலில் பூ முடித்தேன்...ஆஆ.ஆ..
கூந்தலில் பூ முடித்தேன்
.