பாடல்
சௌ: நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே வளர்த்தவன்
நான் நான்
நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே வளர்த்தவன்
நான் நான்
என்னிடம் மயக்கம்
கொண்டவர் பழக்கம்
என்னிடம் மயக்கம்
கொண்டவர் பழக்கம்
இன்றும் என்றும் தேவை
என்று சொல்லடி தங்கம்.....
ஈ: தங்கம் தங்கம்
எங்கள் அங்கம் எங்கெங்கும்
பொன்னும் பெண்ணும்
மஞ்சம் மின்னும் கண்ணெங்கும்
தங்கம் தங்கம்
எங்கள் அங்கம் எங்கெங்கும்
பொன்னும் பெண்ணும்
மஞ்சம் மின்னும் கண்ணெங்கும்
விளையாட்டு பிள்ளைகள்
தலையாட்டும் பொம்மைகள்
வரவேண்டும் எல்லோரும்
உறவாட இன்னேரம்
பட்டாடை தொட்டாட
கட்டாயம் வா
சௌ: நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே வளர்த்தவன்
நான் நான்
என்னிடம் மயக்கம்
கொண்டவர் பழக்கம்
என்னிடம் மயக்கம்
கொண்டவர் பழக்கம்
இன்றும் என்றும் தேவை
என்று சொல்லடி தங்கம்.....
பன்னீரில் குளிப்பது
மாளிகை நெஞ்சம்
தன் கண்ணீரில் மிதப்பது
ஏழைகள் உள்ளம்
பன்னீரில் குளிப்பது
மாளிகை நெஞ்சம்
தன் கண்ணீரில் மிதப்பது
ஏழைகள் உள்ளம்
படைத்தான் ஒரு உலகம்
பணம் தான் அதன் உருவம்
எதுவும் இதில் அடக்கம்
இது ஏன் என்று எதிர் காலம்
விடை கூறட்டும்
நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே வளர்த்தவன்
நான் நான்....
ஈ: செந்தேனை வடிப்பது
தாமரை கன்னம்
அதை சிந்தாமல் கொடுப்பது
பூவிழி கிண்ணம்
செந்தேனை வடிப்பது
தாமரை கன்னம்
அதை சிந்தாமல் கொடுப்பது
பூவிழி கிண்ணம்
முதல் நாள் மெல்ல தொடலாம்
மறு நாள் மிச்சம் பெறலாம்
அவந்தான் நல்ல ரசிகன்
அதை அறியாத நீ யாரோ
புது பாடகன்
சௌ: நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே வளர்த்தவன்
நான் நான்....
சொல்லாமல் நடப்பது
நாடகம் ஒன்று
அது இன்றோடு நில்லாமல்
நாளையும் உண்டு
ஈ: இதழ் மேல் ஒரு பாடல்
மடி மேல் விளையாடல்
இடையில் சிறு ஊடல்
இதை நான் சொல்லதான் இந்த
விழி ஜாடைகள்
சௌ: நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே வளர்த்தவன்
நான் நான்
என்னிடம் மயக்கம்
கொண்டவர் பழக்கம்
என்னிடம் மயக்கம்
கொண்டவர் பழக்கம்
இன்றும் என்றும் தேவை
என்று சொல்லடி தங்கம்.....
.