Follow on

Aairathil oruthiyamma - Kai kodutha Deivam (1964)
Old Thamizh film songs

Aairathil oruthiyamma

Singers: T.M.Soundararajan
Music: Viswanathan, Ramamoorthy
Lyrics: Kannadasan
Film: Kai kodutha Deivam (1964)

Lyrics (பாடல்)

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா
பழக்கத்திலே குழந்தையம்மா
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ....

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா
பழக்கத்திலே குழந்தையம்மா
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.....

பாலினும் வெண்மை
பனியினும் மென்மை
பாலினும் வெண்மை
பனியினும் மென்மை
பச்சை இளம் கிளி மொழி நீ
சொல்வது உண்மை
பாவிகள் நெஞ்சம்
உரைத்திடும் வஞ்சம்
உண்மையென்று சொல்வதர்க்கு
தெய்வமும் அஞ்சும்
தேன் என்ற சொல் என்றும் தேனாகுமோ
தீ என்று சொன்னாலும் தீயாகுமோ....

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா
பழக்கத்திலே குழந்தையம்மா
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.....

பெண்ணோடு தோன்றி
பெண்ணோடு வாழ்ந்தும்
பெண்ணோடு தோன்றி
பெண்ணோடு வாழ்ந்தும்
பெண் மனது என்னவென்று புரியவில்லையோ
கண் என்ன கண்ணோ
நெஞ்சென்ன நெஞ்சோ
களங்கம் சொல்பவர்க்கு உள்ளமில்லையோ
ஆதாரம் நூறென்று ஊர் சொல்லலாம்
ஆனாலும் பொய்யென்று நான் சொல்லுவேன்...

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா
பழக்கத்திலே குழந்தையம்மா
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.....