Follow on


Old Thamizh film songs

manam padaithen unai ninaippadahrku

Singer: P.Susheela (KR.Viajaya, Sivakumar)
Music: KV.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Kandhan Karunai (1967)


பாடல்

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான்
வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான்
வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு....

மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலியிசைக்க
மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலியிசைக்க
கைத்தலம் நான் பற்ற கனவு கண்டேன்
கனவு கண்டேன்
கைத்தலம் நான் பற்ற கனவு கண்டேன்
அந்த கனவுகள் நனவாக உறவு தந்தாய்

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான்
வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
தோழி... தூக்கத்தின் கனவென்று தான் உரைத்தாள்

மனம் படைத்தேன்....
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான்
வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

செவ்வேள் என நீ பெயர் கொண்டாய்
சொல்வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
செவ்வேள் என நீ பெயர் கொண்டாய்
சொல்வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
கைவேல் கொண்டு நீ பகை வென்றாய்
கைவேல் கொண்டு நீ பகை வென்றாய்
இரு கண்வேல் கொண்டு நீ எனை வென்றாய்

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான்
வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான்
வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

.