பாடல்
நான் என்ன சொல்லி விட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்
நான் என்ன சொல்லி விட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன்
ஏன் தலை குனிந்தாயோ
உன் சம்மதம் கேட்டேன்
ஏன் தலை குனிந்தாயோ
என்ன சொல்லி விட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்......
செம் மாம்பழம் போலே
கன்னம் சிவந்துவிட்டதடி
கொண்ட மௌனத்தினாலே
இதழ் கனிந்துவிட்டதடி.....
செம் மாம்பழம் போலே
கன்னம் சிவந்துவிட்டதடி
கொண்ட மௌனத்தினாலே
இதழ் கனிந்துவிட்டதடி
சுகம் ஊறிவிட்டதடி
முகம் மாறி விட்டதடி
சுகம் ஊறிவிட்டதடி
முகம் மாறி விட்டதடி
நெஞ்சில் அன்றில்லாத நாணம்
இன்று எங்கு வந்ததடி
என்ன..என்ன...என்ன...
நான் என்ன சொல்லி விட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன்
ஏன் தலை குனிந்தாயோ
என்ன சொல்லி விட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்......
மலர் பஞ்சணை மேலே
வரும் பருவம் அத்தனையும்
உன் நெஞ்சில் கொண்டாயோ
அதை நினைவில் வைத்தாயோ....
மலர் பஞ்சணை மேலே
வரும் பருவம் அத்தனையும்
உன் நெஞ்சில் கொண்டாயோ
அதை நினைவில் வைத்தாயோ
கண்டு ஏங்குகின்றாயோ
நின்று தூங்குகின்றாயோ
நாம் பழக போகும்
அழகையெல்லாம் படம் பிடித்தாயோ
என்ன..என்ன...என்ன...
நான் என்ன சொல்லி விட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன்
ஏன் தலை குனிந்தாயோ
என்ன சொல்லி விட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்......