Follow on


Old Thamizh film songs

aadhi manidhan kaadhalukku pin

Singers: PB.Srinivas, Jamuna Rani (Balaji, Vasanthi)
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Kannadasan
Film: Bale Pandiya (1962)



Lyrics

mhmm....

PBS: aadhi manidhan kaadhalukku pin
adutha kaadhal idhudhaan

J: aadhaam evaal jodikku pinne
aduththa jodi idhudhaan

PBS: aadhi manidhan kaadhalukku pin
adutha kaadhal idhudhaan

J: aadhaam evaal jodikku pinne
aduththa jodi idhudhaan

PBS: kaNNile kandadhum
eNName maarinen

J: kaadhile kettadhum
kaadhalil moozhginen

PBS: kaNNile kandadhum
eNName maarinen

J: kaadhile kettadhum
kaadhalil moozhginen

PBS: andru annathidam
dhamayanthi thoodhu vittaaL

J: indru aNNanidam
thangai oru thoodhu vittaaL

PBS: andha kaadhal kaadhalaa

J: indha kaadhal kaadhalaa

PBS: aadhi manidhan kaadhalukku pin
adutha kaadhal idhudhaan

J: aadhaam evaal jodikku pinne
aduththa jodi idhudhaan

PBS: Oorai vittu odi vandha kaadhal
idhu uravendru solli vandha kaadhal
kaal nadaiyaai vandha kaadhal
idhu kaaviyathil illaadha kaadhal

J: perai mattum kettu vandha kaadhal
kandu pesaamal aasai vaitha kaadhal
ooraargaL kaaNaadha kaadhal
idhu ulagathil illaadha kaadhal

PBS: idhu devarukkum moovarukkum
sondha kaadhal

J: verum maanidarkku
thondraadhu indha kaadhal

PBS: indha kaadhal kaadhalaa

J: andha kaadhal kaadhalaa

PBS: aadhi manidhan kaadhalukku pin
adutha kaadhal idhudhaan

J: aadhaam evaal jodikku pinne
aduththa jodi idhudhaan

a ha haa...
பாடல்

ம்ஹ்ம்....

பிபிஸ்ரீ: ஆதி மனிதன் காதலுக்கு பின்
அடுத்த காதல் இதுதான்

ஜரா: ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே
அடுத்த  ஜோடி இதுதான்

பிபிஸ்ரீ: ஆதி மனிதன் காதலுக்கு பின்
அடுத்த காதல் இதுதான்

ஜரா: ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே
அடுத்த  ஜோடி இதுதான்....

பிபிஸ்ரீ: கண்ணிலே கண்டதும்
எண்ணமே மாறினேன்

ஜரா: காதிலே கேட்டதும்
காதலில் மூழ்கினேன்

பிபிஸ்ரீ: கண்ணிலே கண்டதும்
எண்ணமே மாறினேன்

ஜரா: காதிலே கேட்டதும்
காதலில் மூழ்கினேன்

பிபிஸ்ரீ: அன்று அன்னத்திடம்
தமயந்தி தூது விட்டாள்

ஜரா: இன்று அண்ணனிடம்
 தங்கை ஒரு தூது விட்டாள்

பிபிஸ்ரீ: அந்த காதல் காதலா

ஜரா: இந்த காதல் காதலா

பிபிஸ்ரீ: ஆதி மனிதன் காதலுக்கு பின்
அடுத்த காதல் இதுதான்

ஜரா: ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே
அடுத்த  ஜோடி இதுதான்

பிபிஸ்ரீ: ஊரை விட்டு ஓடி வந்த காதல்
இது உறவென்று சொல்லி வந்த காதல்
கால் நடையாய் வந்த காதல்
இது காவியத்தில் இல்லாத காதல்

ஜரா: பேரை மட்டும் கேட்டு வந்த காதல்
கண்டு பேசாமல் ஆசை வைத்த காதல்
ஊரார்கள் காணாத காதல்
இது உலகத்தில் இல்லாத காதல்

பிபிஸ்ரீ: இது தேவருக்கும் மூவருக்கும்
சொந்த காதல்

ஜரா: வெரும் மானிடர்க்கு
தோன்றாது இந்த காதல்

பிபிஸ்ரீ: இந்த காதல் காதலா

ஜரா: அந்த காதல் காதலா

பிபிஸ்ரீ: ஆதி மனிதன் காதலுக்கு பின்
அடுத்த காதல் இதுதான்

ஜரா: ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே
அடுத்த  ஜோடி இதுதான்

அஹ ஹா....