Follow on

Old Thamizh film songs

aayi Mahamaayi, aayiram kannudaiyaal

Singer: P.Susheela
Music: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Adhi Parasakthi (1971)

பாடல்

ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்
நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையாள்
சமயபுரத்தாளே, சாம்பிராணி வாசகியே
சமயபுரத்த விட்டு சடுதியிலே வாருமம்மா...
 
மாயி மகமாயி மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே ஆத்தான மாரிமுத்தே
மாயி மகமாயி மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே ஆத்தான மாரிமுத்தே...
 
சிலம்பு பிறந்ததம்மா சிவலிங்கச் பாறையிலே
பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சன்னிதியில்
உடுக்கை பிறந்ததம்மா உத்ராட்ச பூமியிலே
பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்

மாயி மகமாயி மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே ஆத்தான மாரிமுத்தே

பரிகாசம் செய்தவரை பதைபதைக்க வெச்சிடுவே
பரிகாரம் கேட்டு விட்டா பக்கத்துணை நீ இருப்பே
மேனாட்டுப் பிள்ளையிடம் நீ போட்ட முத்திரையை
நீ பார்த்து ஆத்தி வச்சா நாள் பார்த்து பூஜை செய்வான்

மாயி மகமாயி மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே ஆத்தான மாரிமுத்தே

குழந்தை வருந்துவது கோவிலுக்கு கேட்கலையோ
மைந்தன் வருந்துவது மாளிகைக்கு கேட்கலையோ
ஏழைக் குழந்தையம்மா எடுத்தோர்க்கு பாலனம்மா
உன் தாளைப் பணிந்து விட்டால் தயவுடனே காருமம்மா

கத்தி போல் வேப்பிலையாம் காளியம்மன் மருத்துவமாம்
ஈட்டி போல் வேப்பிலையாம் ஈஸ்வரியின் அருமருந்தாம்
வேப்பிலையின் உள்ளிருக்கும் வித்தைதனை யார் அறிவார்
ஆயா மனமிரங்கு - என் ஆத்தா மனமிரங்கு
அம்மையே நீ இறங்கு என் அன்னையே நீ இரங்கு

.