Follow on


Old Thamizh film songs

Kaaveri oram kavi sonna kaadhal

Singer: P.Susheela
Music: AM.Rajah
Lyrics: Kannadasan
Film: Aadi Perukku (1962)


பாடல்

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலை மோதும் நிலை கூறவா
அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா
பொங்கும் விழி நீரை அணை போடவா

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலை மோதும் நிலை கூறவா....

பொருளோடு வாழ்வு உருவாகும் போது
புகழ் பாட பலர் கூடுவார்
அந்த புகழ்  போதையாலே
எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார்
பொருளோடு வாழ்வு உருவாகும் போது
புகழ் பாட பலர் கூடுவார்
அந்த புகழ்  போதையாலே
எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார்
ஏழை விதியோடு விளையாடுவார்
அன்பை மலிவாக எடை போடுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா
பொங்கும் விழி நீரை அணை போடவா

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலை மோதும் நிலை கூறவா....

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார்
வாழ்வில் வளமான மங்கை
பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார்...
அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார்
வாழ்வில் வளமான மங்கை
பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார்
கொஞ்சும் மொழி பேசி வலை வீசுவார்
தன்னை எளிதாக விலை பேசுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா
பொங்கும் விழி நீரை அணை போடவா

மண வாழ்வு மலராத மலராகுமா....
மனதாசை விளையாத பயிராகுமா...
உருவான உயர் அன்பு பறிபோகுமா...
உயிர்வாழ புவி மீது சுமை ஆகுமா
சுமை ஆகுமா
.