Follow on


Old Thamizh film songs

iravukkum pagalukkum

Singers: T.M.Soundararajan, P.Susheela
Music: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Engal Thanga Raja (1973)
 
பாடல்

சு: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

சௌ: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

சு: ம்ம்ம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை......

சௌ: பாதி கண்களை மூடி திறந்து
பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி
ரசிப்பதில் இன்பம்..ஆஆஆ
பாதி கண்களை மூடி திறந்து
பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி
ரசிப்பதில் இன்பம்

சு: பாதி பாதியாய் இருவரும் மாறி
பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்று தான் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்று தான் இன்பம்

சௌ: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை

சு: உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்

சௌ: இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

சு:  ஆஅஆ...இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை.....

சு:  ஆடை இதுவென நிலவினை எடுக்கும்
ஆனந்த மயக்கம்

சௌ: அம்மா குளிரென ஒன்றினை ஒன்று
அணைப்பது பழக்கம்

சு:  ஆஅஆ... ஆடை இதுவென நிலவினை எடுக்கும்
ஆனந்த மயக்கம்

சௌ: அம்மா குளிரென ஒன்றினை ஒன்று
அணைப்பது பழக்கம்

சு:  காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
களிப்பதென்பது கவிதையின் விளக்கம்

சௌ: கவிஞர் சொன்னது கொஞ்சம்
இனிமேல் காணப் போவது மஞ்சம்

சு:  ஆஅஆ...

சௌ: கவிஞர் சொன்னது கொஞ்சம்
இனிமேல் காணப் போவது மஞ்சம்

சௌ, சு: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
லாலலாலலா லாலாலலலா....