Follow on

varavu ettanna selavu pathanna _ Bama Vijayam
Old Thamizh film songs
 
varavu ettanna selavu pathanna
Music: M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Film: Bama Vijayam (1967)


பாடல் (Lyrics)

பாலைய்யா:
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா....

அனைவரும்: ஹா ஹா...
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா
ஆ அஆ அஆ..

பாலைய்யா:  1 2 3 4 5 6 7 8 ம்ம்ம்ம்

அனைவரும்: வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா....

நிலமைக்கு மேலே நினைப்பு வந்தால்
நிம்மதி இருக்காது ஐயா
நிம்மதி இருக்காது

அளவுக்கு மேலே ஆசை வந்தா
உள்ளதும் நிலைக்காது அம்மா
உள்ளதும் நிலைக்காது....

சௌகார்:
வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள
நல்லது பிடிக்காது மம்மா
நல்லது பிடிக்காது

சௌகார், காஞ்சனா, ஜயந்தி:
வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள
நல்லது பிடிக்காது மம்மா
நல்லது பிடிக்காது

நாகேஷ்:
வயசு பிள்ளைகள் புதுசா பெரிசா
வாழ்வது பொறுக்காது அப்பா
வாழ்வது பொறுக்காது
வயசு பிள்ளைகள் புதுசா பெரிசா
வாழ்வது பொறுக்காது
நாகேஷ், முத்துராமன், மேஜர்:
அப்பா வாழ்வது பொறுக்காது

பாலைய்யா:
வாடகை சோஃபா..
நாகேஷ்:
இருபது ரூபா
பாலைய்யா:
விலைக்கு வாங்கினா
நாகேஷ்:
முப்பதே ரூபா

அனைவரும்:
வாடகை சோஃபா..
இருபது ரூபா
விலைக்கு வாங்கினா
முப்பதே ரூபா

வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா.....

பாலைய்யா:
அடங்கா மனைவி அடிமை புருஷன்
குடுபத்துக்காகாது

அனைவரும்:
அடங்கா மனைவி அடிமை புருஷன்
குடுபத்துக்காகாது அய்யா
குடுபத்துக்காகாது

சச்சு:
யானையை போலே பூனையும் தின்னா
ஜீரணம் ஆகாது அய்யா
ஜீரணம் ஆகாது

அனைவரும்:
யானையை போலே பூனையும் தின்னா
ஜீரணம் ஆகாது அய்யா
ஜீரணம் ஆகாது

நாகேஷ்:
பச்சை கிளிகள் பறப்பதை பார்த்தா
பருந்துக்கு பிடிக்காது அப்பா
பருந்துக்கு பிடிக்காது
பச்சை கிளிகள் பறப்பதை பார்த்தா
பருந்துக்கு பிடிக்காது
முத்துராமன், மேஜர்:
அப்பா பருந்துக்கு பிடிக்காது

சௌகார்:
பணத்தை பார்த்தா கௌரவம் என்பது
மருந்துக்கும் இருக்காது மம்மா
மருந்துக்கும் இருக்காது

சௌகார், காஞ்சனா, ஜயந்தி:
பணத்தை பார்த்தா கௌரவம் என்பது
மருந்துக்கும் இருக்காது மம்மா
மருந்துக்கும் இருக்காது

பாலைய்யா:
தங்க சங்கிலி... இரவல் வாங்கினா
தவறி போச்சுனா
தகிட தந்தனா

நாகேஷ், முத்துராமன், மேஜர்:
ஹோ ஹோ ஹோ அப்பா ஹே ஹே ஹே...

பாலைய்யா:
பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக
இங்கே எதுக்காக

அனைவரும்:
பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக
இங்கே எதுக்காக அம்மா
இங்கே எதுக்காக

நாகேஷ்:
மாதர்கள் எல்லாம் கன்னிகளாக
மாறணும் அதுக்காக அப்பா
மாறணும் அதுக்காக

அனைவரும்:
கன்னிகளாக மாறணும் என்றால்
பிள்ளைகள் எதுக்காக அய்யா
பிள்ளைகள் எதுக்காக

நாகேஷ்:
காதல் செய்த பாவத்துக்காக
வேறே எதுக்காக அப்பா
வேறே எதுக்காக

பாலைய்யா:
பட்டால் தெரியும்
பழசும் புதுசும்
கெட்டால் தெரியும்
கேள்வியும் பதிலும்

அனைவரும்:
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா
ஆ அஆ அஆ..

வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா
துந்தணா துந்தணா