Follow on

amudhum thenum edharku song
Old Thamizh film songs

amudhum thenum edharku

Singer: Sirgazhi Govindarajan
Music: K.V.Mahadevan
Lyrics: Suradha
Film: Thai pirandhal vazhi pirakum (1958)

பாடல் வரிகள் (Lyrics)

அமுதும் தேனும் எதற்கு
அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு....

அருவி தரும் குளிர் நீர்
அன்பே நீயே
அருவி தரும் குளிர் நீர்
அன்பே நீயே
அதுவும் சுடு நீர் ஆகும் நமக்கு
அதுவும் சுடு நீர் ஆகும் நமக்கு
அமுதும் தேனும் எதற்கு.....

நிலவின் நிழலோ உன் வதனம்..ம்ம்..அஆஅ....
நிலவின் நிழலோ உன் வதனம்
புது நிலை கண்ணாடியோ மின்னும் கன்னம்
நிலவின் நிழலோ உன் வதனம்
புது நிலை கண்ணாடியோ மின்னும் கன்னம்
மலையில் பிறவா மாமணியே
மலையில் பிறவா மாமணியே
நான் கொய்யும் கொய்யா கனியே...
வான் அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு.....

விழியாலே காதல் கதை பேசி
மலர் கையாலே சந்தனம் பூசி
விழியாலே காதல் கதை பேசி
மலர் கையாலே சந்தனம் பூசி
தமிழ் மொழி போலே சுவையூட்டும் செந்தேனே
தமிழ் மொழி போலே சுவையூட்டும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே
வான் அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு