Follow on

aasaiye alai pole song
Old Thamizh film songs

aasaiye alai pole

Singer: Tiruchy Loganathan
Music: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Thai pirandhal vazhi pirakum (1958)

பாடல் வரிகள்

ஆசையே அலை போலே
நாமெலாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே
வாழ் நாளிலே

ஆசையே அலை போலே
நாமெலாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே
வாழ் நாளிலே....

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை யார் காணுவார்

ஆசையே அலை போலே
நாமெலாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே
வாழ் நாளிலே

வாழ்க்கையெல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
வாழ்க்கையெல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெருமா முதுமையே சுகமா
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்

ஆசையே அலை போலே
நாமெலாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே
வாழ் நாளிலே

சூரை காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ..ஆ அ ஆ...
சூரை காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்

ஆசையே அலை போலே
நாமெலாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே
வாழ் நாளிலே...ஆ அ ஆ...