Follow on

Old Thamizh film songs

sirithu sirithu ennai siraiyil ittai

Singers: TM Soundararajan, P Susheela
Music: KV Mahadevan
Lyrics: Kannadasan
Film: Thaai sollai thattaadhe (1961)
Cast: MGR, Saroja Devi, Ashokan

பாடல்

சௌ, சு: ஹஹஹ ஹொ ஹொ ஹொ
ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ம்ம்ம்ம்.......

சௌ: சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்

சு: நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய்
பக்கம் நெருங்கி நெருங்கி இன்ப சுவை கொடுத்தாய்

சு: ஹோஹோஹொ......

சௌ: பழக பழக வரும் இசை போலே
தினம் படிக்க படிக்க வரும் கவி போலே
பழக பழக வரும் இசை போலே
தினம் படிக்க படிக்க வரும் கவி போலே

சு: அருகில் அருகில் வந்த உறவினிலே
மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே
சௌ: ம்ஹ்ம்
சு: அருகில் அருகில் வந்த உறவினிலே
மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே

சௌ: சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்
சு: ஹஹஹஹா ஹா...

சௌ: இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே

சு: எளிமை பெருமை எது வந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
சௌ: ம்ஹ்ம்
எளிமை பெருமை எது வந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
இருவர் வழியும் ஒன்றே

சௌ: சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்
சு: ஹஹஹஹா ஹஹா...

சௌ: இளமை சுகமும் இனிமை கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இளமை சுகமும் இனிமை கனவும்
இருவர் மனமும் ஒன்றே

சு: இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
சௌ: ம்ஹ்ம்ம்ஹ்ம்
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே

சௌ: சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்

சு: நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய்
பக்கம் நெருங்கி நெருங்கி இன்ப சுவை கொடுத்தாய்

சௌ: சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்
சௌ, சு: ஹஹஹஹா...