Follow on

Old Thamizh film songs

vilaketri vaikiren

Singer: P.Susheela (K.R.Vijaya, Jai Shankar)
Music: MSV
Lyrics: Kannadasan
Film: Soodhattam (1971)


பாடல்

விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்களெல்லாம்
நல்லதாக நடக்கட்டும்

விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்களெல்லாம்
நல்லதாக நடக்கட்டும்
நல்லதாக நடக்கட்டும்
நடக்கட்டும்

மஞ்சளிலே நீ கொடுத்தாய் மங்கலம்
இந்த மஞ்சத்திலே நான் தருவேன் மந்திரம்
மஞ்சளிலே நீ கொடுத்தாய் மங்கலம்
இந்த மஞ்சத்திலே நான் தருவேன் மந்திரம்
நெஞ்சத்திலே பூசி விடும் சந்தனம்
அதை கொஞ்சட்டுமே நீ கொடுத்த குங்குமம்
நெஞ்சத்திலே பூசி விடும் சந்தனம்
அதை கொஞ்சட்டுமே நீ கொடுத்த குங்குமம்
உன்னை தஞ்சமென்று தழுவி கொண்டது பெண் மனம்
இனி கொஞ்சமல்ல கோடி கொள்ளும் உன் மனம்

விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்களெல்லாம்
நல்லதாக நடக்கட்டும்
நல்லதாக நடக்கட்டும்
நடக்கட்டும்

ஓ ஓ....
ஆஆஅ....

கருணைமிகும் மாரியம்மன் துணையிலே
நல்ல கல்வியுடன் செல்வம் உண்டு மனையிலே
பொறுமையுடன் பாசம் உண்டு பெண்ணிலே
அதன் பூஜை எல்லாம் எதிரொலிக்கும் விண்ணிலே
என் வீடு என்பதும் கோவில் என்பதும் ஒன்று தான்
நான் வாழ்வு என்பது காண வந்தது இங்குதான்

விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்களெல்லாம்
நல்லதாக நடக்கட்டும்
நல்லதாக நடக்கட்டும்
நடக்கட்டும்

பருவம் கண்டு ஓடி வரும் மழையிலே
நல்ல பழங்கள் உண்டு நெல்லும் உண்டு வயலிலே
பருவம் கண்டு ஓடி வரும் மழையிலே
நல்ல பழங்கள் உண்டு நெல்லும் உண்டு வயலிலே
கணவன் என்னும் மேகம் தந்த மழையிலே
இளம் மனைவியிடம் மழலை வரும் மடியிலே
நான் காதல் தெய்வம் காண வேண்டும் பண்பிலே
நீ காவல் தெய்வம் ஆக வேண்டும் அன்பிலே

விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்களெல்லாம்
நல்லதாக நடக்கட்டும்
நல்லதாக நடக்கட்டும்
நடக்கட்டும்

ஓ ஓ....
ஆஆஅ....


.