Follow on

pennalla nee oru bommai - Sonthamadi Nee Enakku (1977)
Old Thamizh film songs

pennalla nee oru bommai

Singers: Jayachandran, Vani Jayaram (Jai Shankar, Sri Priya)
Music: V.Kumar
Lyrics: Vaali
Film: Sonthamadi Nee Enakku (1977)

Lyrics (பாடல்)

ஜெ: பெண்ணல்ல நீ ஒரு பொம்மை
பொய் அல்ல நான் சொல்வதுண்மை
பெண்ணல்ல நீ ஒரு பொம்மை
பொய் அல்ல நான் சொல்வதுண்மை
நீ ஆடும் ஆட்டங்கள் யாவும்
உன் தாயாரின் ஆணைகள் ஆகும்

வா: நான் தானா தலையாட்டும் பொம்மை
நீ கூட அது தானே உண்மை
அந்நாளில் தாய் சொன்ன சொல்லை
எந்நாளும் நீ தாண்டவில்லை

ஜெ: தன் மேனி பாதி பெண் மேனி பாதி
எதற்காக சிவன் இங்கு கொண்டான்
ஒன்றோடு ஒன்று விலகாமல் நின்று
உறவாடல் நலம் என்று சொன்னான்
ஏன் இந்த பேதம் ஏன் இந்த வாதம்
இனிமேலும் பிடிவாதம் போதும்
பெண்ணல்ல நீ ஒரு பொம்மை
பொய் அல்ல நான் சொல்வதுண்மை
நீ ஆடும் ஆட்டங்கள் யாவும்
உன் தாயாரின் ஆணைகள் ஆகும்

வா: முன்னூறு வருடம் முன்னாடி சொன்னால்
உன் பேச்சை பெண் கேட்க கூடும்
வெண் மேகம் தாண்டி விண் மீது ஏறி
பெண் பாவை செல்கின்ற காலம்
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
மாறாமல் வாழ்ந்தென்ன லாபம்

நான் தானா தலையாட்டும் பொம்மை
நீ கூட அது தானே உண்மை
அந்நாளில் தாய் சொன்ன சொல்லை
எந்நாளும் நீ தாண்டவில்லை

ஜெ: பெண்ணல்ல நீ ஒரு பொம்மை