Iravu mudindhuvidum, mudindhaal, pozhudhu vidindhu vidum
PB Srinivas, P Susheela
Music: R Sudarsanam
Lyrics: Vaali
Film: Anbu Karangal (1965)
Cast: Sivaji Ganesan, Devika


பாடல்

ஆ: இரவு முடிந்துவிடும்
பெ: முடிந்தால்?
ஆ: பொழுது விடிந்துவிடும்
பெ: விடிந்தால்?
ஆ: ஊருக்கு தெரிந்துவிடும்
பெ: தெரிந்தால்?
ஆ: உண்மைகள் புரிந்துவிடும்                                           (இரவு)

பெ: காய் பழுத்துக் கனிந்துவிட்டால் கிளையில் தங்குமா?
ஆ: கைகளில் விழுந்திடாமல் பசியடங்குமா?
பெ: பக்கத்திலே வந்து நின்றால் வெட்கம் வராதா?
ஆ: பருவ காலக் காற்றடித்தால் குளிரெடுக்காதா?                              (இரவு)

ஆ: ஆசையென்ற ஊஞ்சலிலே ஆட வைத்தாயே - உன்
அருகில் நின்று உருகி உருகி பாட வைத்தாயே

பெ: அஞ்சி அஞ்சி வந்தவளை அள்ளிக் கொண்டாயே - என்
நெஞ்சமெனும் பஞ்சணையில் பள்ளி கொண்டாயே               (இரவு)




Tamil Film Songs
| Home