Follow on


Old Thamizh film songs

ammavum neeye

Singer: MS.Rajeswari
Music: R.Sudharsanam
Lyrics: TK.Sundara Vadhiyar
Film: Kalathur Kannamma (1960)
Cast: Kamal Hassan


பாடல்

ரா: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அனைவரும்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே

ரா: தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனசாந்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே
அனைவரும்: ஆ அஆஅஆ...
ரா: தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனசாந்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே

எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே
எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே
இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ
முருகா
அனைவரும்: முருகா
ரா: முருகா
அனைவரும்: முருகா
ரா: முருகா முருகா
அனைவரும்: முருகா முருகா

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே

ரா: பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே
அனைவரும்: ஆ அஆஅஆ...
ரா: பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே

ஈ எரும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
ஈ எரும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ

முருகா
அனைவரும்: முருகா
ரா: முருகா
அனைவரும்: முருகா
ரா: முருகா முருகா
அனைவரும்: முருகா முருகா
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே
.